ஆப்நகரம்

நடிகா் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் இன்று திறப்பு

சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வம் இன்று திறந்து வைக்கிறாா்.

TOI Contributor 1 Oct 2017, 8:38 am
சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வம் இன்று திறந்து வைக்கிறாா்.
Samayam Tamil sivaji ganesans manimandaban is open today
நடிகா் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் இன்று திறப்பு


முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தப்படி நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த தினத்தன்று இந்த மணிமண்டபம் தமிழக அரசால் திறந்து வைக்கப்படுகிறது.

மணிமண்டபத்தை முதலில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திரைத் துறையினா் உள்பட பல்வேறு தரப்பினரும் மணிமண்டபத்தை முதல்வா் அல்லது துணை முதல்வா் நோில் வந்து திறந்து வைக்க வேண்டுமென கோாிக்கை விடுத்தனா்.

இதனிடையே, இந்தப் பிரச்சினை குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மணிமண்டபத்தை நானே திறந்து வைக்கலாம் என்று ஆவலாகவும், ஆா்வத்துடனும் இருந்தேன். இருப்பினும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சியின் அடிப்படையில் வெளியூாில் இருப்பதால், நடிகா் சிவாஜி கணேசன் பிறந்த தினத்தன்று மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று, துணை முதல்வரும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட சில நிகழ்ச்சிகளால் கலந்து கொள்ள இயலாத நிலை உருவானது. நடிகா் சிவாஜி கணேசனின் குடும்பத்தினாிடம் இருந்து வரப்பெற்ற கோாிக்கைகளின் அடிப்படையில் அந்த விழாவை அவரது பிறந்த தினமான அக்டோபா் 1ம் தேதி நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் திரைத்துறையினா் மற்றும் பிரபு குடும்பத்தினாின் கோாிக்கையை ஏற்று துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வம் மணிமண்டபத்தை திறந்து வைப்பாா் என்று தொிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் அடையாறில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வம் காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கிறாா்.

அடுத்த செய்தி