ஆப்நகரம்

திருச்சியில் உலாவரும் அரசின் காசநோய் பரிசோதனை வாகனம்

காசநோய் பரிசோதனைக்காக நடமாடும் மருத்துவ வாகனங்களை தமிழக அரசு திருச்சியில் உலா வருகிறது.

Samayam Tamil 25 Jun 2018, 9:14 pm
திருச்சியில் இயக்கப்படுகிறது.
Samayam Tamil 64732058


தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நடமாடு காசநோய் பரிசோதனை வாகனத்தின் பயணத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இது தற்போது திருச்சியில் இயக்கப்பட்டு வருகிறது. தாராநல்லூர், சின்னசாமி நகர், ஈபி ரோடு, ஜெயில் பேட்டை, மணப்பாறை, திருவெரும்பூர், துறையூர், மணச்சநல்லூர், முறிசி, லால்குடி, உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் செல்கிறது.

2025ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் காசநோயை அடியோடு ஒழிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மருத்துவ வசதிகளில்லாத குக்கிராம மக்களும் பயனடைவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, இந்த வாகனங்கள் இதுவரை காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பரிசோதனையை முடித்துவிட்டன.

தொடர்ந்து, திருநெல்வேலி, பெரம்பலூர், தூத்துக்குடி, அரியலூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்களிலும் பயணம் செய்யவிருக்கிறது.

அடுத்த செய்தி