ஆப்நகரம்

விடிய விடிய அடிச்சு நொறுக்கிய மழை!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பல இடங்களில் மழை பெய்துவருகிறது.

Samayam Tamil 14 Dec 2019, 7:40 am
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி பெய்துவருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருவமழை பல இடங்களில் நல்ல மழைப் பொழிவை கொடுத்துள்ளது.
Samayam Tamil விடிய விடிய அடிச்சு நொறுக்கிய மழை


சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் இரு நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு முதல் தமிழ்நாட்டில் பல இடங்களில் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருப்பூண்டி, வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துள்ளது.

ஆறு மாவட்டங்களுக்கு கனமழை: உங்க ஊருக்கு எப்படின்னு பார்த்திடுங்க!

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், ஜானகிபுரம், முண்டியம்பாக்கம், கோலியனூர், சாலாமேடு ஆகிய பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்தில், கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, பெண்ணாடம், திட்டக்குடி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

Chennai Rains: மீண்டும் வெளுக்கப் போகும் கனமழை - இந்தப் பகுதி மக்கள் எல்லாம் உஷாரா இருங்க!

சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, ஆண்டாள் குப்பம், கவரைபேட்டை, கும்மிடிப்பூண்டி, மிஞ்சூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், அறந்தாங்கி பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

அடுத்த செய்தி