ஆப்நகரம்

நெல்லை அருகே 2 அரசு பேருந்துகள், வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வேன் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 23 Dec 2018, 2:35 pm
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வேன் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil நெல்லை அருகே 2 அரசு பேருந்துகள், வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!
நெல்லை அருகே 2 அரசு பேருந்துகள், வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேகர் என்பவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை கங்கைகொண்டான் அருகே, வேன் சென்று கொண்டிருந்த போது சாரல் மழை காரணமாக, ஓட்டுநர் வேனை திடீரென நிறுத்தியுள்ளார்.

இதனால் பின்னால் வந்த அரசுப் பேருந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதையடுத்து, இரு ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் இருதரப்பினரும் பேசி முடிவுக்கு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஓட்டுனர் பேருந்தை பின்பக்கமாக எடுத்தபோது மதுரையில் இருந்து நெல்லை நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பின்னோக்கி வந்த பேருந்து மீது மோதியது. இதனால், முன்னால் நின்ற வேனும் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், , வேன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி