ஆப்நகரம்

இதுவரை 80 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் இதுவரை 80 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

TNN 17 May 2017, 9:36 pm
சென்னை : தமிழகத்தில் இதுவரை 80 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
Samayam Tamil smart card minister explained
இதுவரை 80 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் காமராஜ்



சென்னை கோபாலபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை கோபாலபுரத்திலுள்ள பொதுவிநியோகத் திட்டக் கிடங்கு ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , " , தினந்தோறும் 4 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக 973 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். துறைசார்ந்தவர்கள் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இதுவரை 80 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

அடுத்த செய்தி