ஆப்நகரம்

நாளை முதல் "ஸ்மார்ட் ரேசன் கார்டு" வழங்கும் பணி துவக்கம்

தமிழகம் முழுவதும் நாளை முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்பட இருக்குகிறது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி நாளை கொரட்டூரில் துவங்கிவைக்கிறார்.

TNN 31 Mar 2017, 6:07 pm
சென்னை : தமிழகம் முழுவதும் நாளை முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்பட இருக்குகிறது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி நாளை கொரட்டூரில் துவங்கிவைக்கிறார்.
Samayam Tamil smart ration card will issue from tommorrow onwards
நாளை முதல் "ஸ்மார்ட் ரேசன் கார்டு" வழங்கும் பணி துவக்கம்



இதுகுறித்து உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறும்போது, " பழைய ரே‌ஷன் கார்டுகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி நாளை கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார்.


சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக சென்னையில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளை 1-ந்தேதி வழங்க இயலாது. அதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 1-ந்தேதி ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வாங்க பொதுமக்கள் முண்டியடிக்க தேவையில்லை. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும்.@;அதில் ஸ்மார்ட் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்க வேண்டும் என்று ‘மெசேஜ்’ வரும். அதன் பிறகு மக்கள் வந்தால் போதும்.மெசேஜ் வராதவர்களுக்கு இன்னும் கார்டு ‘பிரிண்ட்’ ஆகவில்லை என்று அர்த்தம். ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அது கிடைக்கும் வரை பழைய ரே‌ஷன் கார்டுகளையும் 2 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார்.

smart ration card will issue from tommorrow onwards

அடுத்த செய்தி