ஆப்நகரம்

83 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தல்... கடற்கரையில் கையுங்களவுமாக சிக்கிய இளைஞர்...

இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்களாக கடல் அட்டை, டீசல் உள்ளிட்ட பொருட்கள் இருந்து வந்த நிலையில் அண்மைக்காலமாக கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 10 Nov 2019, 1:09 pm
இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்களாக கடல் அட்டை, டீசல் உள்ளிட்ட பொருட்கள் இருந்து வந்த நிலையில் அண்மைக்காலமாக கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது.
Samayam Tamil கடத்தப்பட்ட கஞ்சா
கடத்தப்பட்ட கஞ்சா

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட சுமார் 83 கிலோ எடையுள்ள கேரள இளைஞரை கஞ்சாவுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில், தமிழகத்தில் இருந்து கடத்தி எடுத்து வரப்பட்ட சுமார் 83 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சா சிக்கியது. சோதனையின்போது இதனை கண்டுபிடித்த அதிகாரிகள், கஞ்சாவுடன் சிக்கிய இளைஞரை கைது செய்துள்ளனர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி