ஆப்நகரம்

பாம்பு போற இடமா அது? எல்லோரையும் மிரள வைத்த முரட்டு பாம்பு!

காஞ்சிபுரம் எஸ்.வி.என் தெருவில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் 4 அடி நீள பாம்பு இருசக்கர வாகனத்தினுள் சென்றதால் தீயணைப்பு துறை வந்து மீட்டனர்.

Samayam Tamil 24 Jun 2021, 11:27 pm

ஹைலைட்ஸ்:

  • இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த முரட்டு பாம்பு
  • காஞ்சிபுரம் எஸ்.வி.என் தெருவில் பரபரப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பாம்பு
காஞ்சிபுரம் எஸ்.வி.என் தெருவில் வசிக்கும் ஆஸ்வின் என்பவர் வீட்டின் முன்பு தனது டிவிஎஸ் ஜுபிடர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். இந்த வாகனத்துக்குள் நான்கு அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்ததால் அனைவரும் அச்சமடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்பு துறை விரைந்து வந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு அந்த பாம்பை மீட்டனர். அப்பாம்பு கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்தது. இவை நீளமாக தென்படும் என்றும், இன்று பிடிபட்ட பாம்பு 4 அடி நீளம் கொண்டதாக உள்ளது எனவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

காஞ்சிபுரத்தில் எப்போதும் பரபரப்பாகவும், ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவும் காணப்படும் எஸ்.வி.என் தெருவில்தான் பல முன்னணி நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பணிக்கு செல்வோர் சென்றுவரும் பேருந்து நிறுத்தம் இருக்கிறது.

என்னது ஸ்டாலினா? நிஜமாவா? அட ஆமா.. குவியும் பாராட்டுகள்!
எனவே, இந்த பாம்பு மீட்கப்படுவதை அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடி வேடிக்கை பார்த்தனர். பாம்பை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் பார்த்திபன் உட்பட ஐந்து தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி