ஆப்நகரம்

சென்னையில் பாம்பு நடனம்

மிகவும் பரபரப்பான சென்னை நகரில், அடையாறு அருகே இரண்டு பாம்புகள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வண்ணம் பிண்ணிப்பிணைந்து ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடனமாடியது.

TNN 24 Jul 2017, 4:05 pm
மிகவும் பரபரப்பான சென்னை நகரில், அடையாறு அருகே இரண்டு பாம்புகள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வண்ணம் பிண்ணிப்பிணைந்து ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடனமாடியது.
Samayam Tamil snakes mate at adyar theosophical society
சென்னையில் பாம்பு நடனம்


ஊர்வனவற்றுள் மனிதன் அதிகம் பயப்படுவது பாம்பு என்று சொல்லலாம். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என சொல்வதுண்டு.

இரண்டு பாம்புகள் பிண்ணிபிணைந்து நடனமாடுவதைப் பார்த்திருப்போம். அது ஏன் அப்படி ஆடுகின்றது என பலரும் வியந்திருப்பர். இதுவும் ஒரு இயற்கை நிகழ்வே.
பாம்புகளில் அந்த விஷயத்துக்கு அழைப்பதில் முக்கிய பங்கு பெண் நாகத்திற்கு தான் உண்டு. பெண் நாகம் அதற்கு ரெடியானதும், தன் உடலில் ஒரு நறுமணத்தை வெளிப்படுத்தும். இதனால் ஈர்க்கப்படும் ஆண் நாகம் சேர்ந்து பிண்ணிக் கொண்டு நடனமாடும்.



நேற்று, அடையாற்றில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியில் இரு பாம்புகள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கலவி கொண்டு நடனமாடியது.

அடுத்த செய்தி