ஆப்நகரம்

தேர்தல் நடத்தை விதி மீறல்: இது வரை ரூ. 7.4 கோடி பறிமுதல்

வரும் மே 16-ஆம் தேதியன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதையொட்டி, தேர்தல் விதிமுறையின்படி நடந்த வாகன சோதனைகளில்இது வரை ரூ. 7.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

TNN 15 Mar 2016, 7:55 pm
சென்னை: வரும் மே 16-ஆம் தேதியன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதையொட்டி, தேர்தல் விதிமுறையின்படி நடந்த வாகன சோதனைகளில் இது வரை ரூ. 7.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil so far 7 4 crore money have been captured during vehicle check in tn
தேர்தல் நடத்தை விதி மீறல்: இது வரை ரூ. 7.4 கோடி பறிமுதல்


இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், "தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரூ. 7.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

கோவை அடுத்த சூலூர் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த வாகன சோதனையில், ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன சோதனையில் விகாஷ் என்பவரிடமிருந்து மேற்கூறிய பணம் கைபற்றபட்டது.கைப்பற்றப்பட்டது.

மேலும், கடந்த வாரத்தில் திருச்சி மாவட்டம ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் பணம் இருப்பது தெரியவந்தது. அவ்வாகனத்தில் இருந்த 2 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி