ஆப்நகரம்

தாமிரபரணி நதியை காக்க சமூகவலைதளங்களில் வலுக்கும் குரல்கள்

தென் தமிழகத்தின் முக்கிய நதியான தாமிரபரணியை பாதுக்காக்க வேண்டும் என்று சமுகவலைதளங்களில் குரல்கள் வலுத்துவருகின்றனர்.

TNN 25 Jan 2017, 12:44 pm
நெல்லை : தென் தமிழகத்தின் முக்கிய நதியான தாமிரபரணியை பாதுக்காக்க வேண்டும் என்று சமுகவலைதளங்களில் குரல்கள் வலுத்துவருகின்றனர்.
Samayam Tamil social media discuss about savethamirabarani
தாமிரபரணி நதியை காக்க சமூகவலைதளங்களில் வலுக்கும் குரல்கள்


தென் தமிழகத்தின் முக்கிய நதியாகவும் , வற்றாத நதியாகவும் தாமிரபரணி நதி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட்ட தென் மாநில மக்களின் விவசாய தேவைக்காக தண்ணீரையும், குடி தண்ணீர் தேவையையும் இந்த நதிதான் பூர்த்தி செய்துவருகிறது.


தொழில் நிறுவனங்களுக்கு லட்சம் லிட்டர் கணக்கில் வழங்கப்படும் நீராலும் , மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தாமிரபரணி நதியானது அழிவுநிலைக்கு சென்று கொண்டிருப்பதாக அதனை பாதுகாக்கவேண்டும் சமூகவலைதளங்களில் குரல்கள் வலுத்துவருகின்றனர்.

இந்தநிலையில் சமூகவலைதளங்களில் மட்டும் பகிர்வதோடு மட்டுமில்லாமல் தாமிரபரணி நதியை காக்க மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி களம் காணவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் குரலாக உள்ளது.

அடுத்த செய்தி