ஆப்நகரம்

2 ஆவது முறையாக உயர்த்தப்படும் பெண்கள் முதிர்வுத்தொகை... 2 பெண் குழந்தைகள் இருந்தால் 1 லட்சம் ரூபாய்...

​​இந்தத் தொகையைப் பெற குழந்தைகள் 3 வயது பூர்த்தியடைவதற்கு முன் விண்ணப்பித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 23 Jan 2020, 8:45 am
பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ரூ.50ஆயிரம் முதிர்வுத்தொகை வழங்கும் 'பெண்களுக்கான முதிர்வுதொகை' என்ற திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 24 ஆயிரம் பயனாளிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil child


சமூக நலத்துறையின் சார்பில் 1992ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த உதவித்தொகை இந்த ஆண்டு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 2011 ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பு ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்த ஒரு குழந்தைக்கு ரூ.22,200மும், ஒருவேளை 2 குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்குத் தலா ரூ.15,200 என்றபடி முதிர்வுத்தொகை வழங்கப்பட்டு வந்தது.

பாஜக பற்றி நா பேசுனதெல்லாம் உண்மையில்லை என அதிமுக அமைச்சர் பல்டி!

இந்தத் தொகை 2011 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, ஒரு பெண் குழந்தையாக இருந்தால் ரூ.50 ஆயிரம் ரூபாயாகவும், 2 குழந்தைகள் இருந்தால் தலா 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது இந்த உதவித்தொகை. அதன்படி, 2 குழந்தைகள் இருந்தால் தலா.25,000 ரூபாய் என்பதை மாற்றி தலா.50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகையைப் பெற குழந்தைகள் 3 வயது பூர்த்தியடைவதற்கு முன் விண்ணப்பித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி