ஆப்நகரம்

சசிகலாவை ரகசியமாக சந்தித்த அதிமுக முக்கிய புள்ளிகள் யார் யார்?

அதிமுகவைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் சசிகலாவை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Samayam Tamil 20 Sep 2021, 11:01 am
தினகரன் மகள் திருமண விழா மூலம் அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான சம்பவங்கள் எதும் நிகழாமல் திருமண விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.
Samayam Tamil Sasikala


அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் திருமணத்துக்கு வரக்கூடும் என பல மாதங்களுக்கு முன்னரே பேசப்பட்டது. நிகழ்வுக்கு யார் யார் வருகிறார்கள், யாரெல்லாம் சசிகலாவிடம் பேசுகிறார்கள் என்பதை பொறுத்து அதிமுகவுக்குள் அடுத்தகட்ட பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் குடும்ப விழாவாக திருமணம் நடைபெற்றுள்ளது.

சசிகலா வந்தும் அங்கு அரசியல் நிகழ்வு இல்லை என்றால் எப்படி? இது தொடர்பாக அறிய திருவண்ணாமலையை நாம் சுற்றிவந்தபோது பல்வேறு விஷயங்கள் கிடைத்துள்ளன.
1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு: முதல்வர் எடுக்கும் முக்கிய முடிவு!
சிறையிலிருந்து விடுதலையாகி பிப்ரவரி மாதமே சசிகலா சென்னை வந்தநிலையில் அவரை பார்க்காமல் தவிர்த்து வந்த அதிமுக முக்கிய புள்ளிகள் திருவண்ணாமலையில் அவரை சந்தித்துப் பேசியதாக கூறுகிறார்கள். திருமணத்தில் கலந்துகொண்டால் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதாலும், உளவுத் துறை நோட் பண்ணும் என்பதாலும் அதிமுக கொடி இல்லாத காரில் வந்திறங்கி சசிகலாவை அவர் தங்கியிருந்த விடுதியில் சந்தித்துள்ளனர்.

பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வரவில்லை. வட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முக்கிய புள்ளிகள், அந்தப் பகுதிகளில் சசிகலாவின் சொத்துக்களை பராமரித்து வந்தவர்கள் என பலர் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சசிகலாவை சந்தித்துள்ளனர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

சொத்துகள் முடக்கம், மீண்டும் வழக்கு என அடுத்தடுத்து சசிகலாவை குறிவைத்து காய் நகர்த்தப்பட்டாலும் அவர் கட்சிக்குள் எண்ட்ரி கொடுப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறாராம்.

குடும்பத்துக்குள்ளே ஆயிரம் குழப்பம் இருக்கும் போது கட்சிக்குள் வந்து குழப்பத்தை தீர்க்கப்போகிறாரா என எடப்பாடி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தினகரன் - திவாகரன் விலகி நிற்பது வெளிப்படையாக தெரியும் நிலையில் அதை சசிகலா சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். திருமண விழாவிலேயே இருவரிடமும் பேசி ஒற்றுமையாக்க நினைத்தாராம். ஆனால் திவாகரனோ அன்றைய தினம் மன்னார்குடி பக்கம் சென்றுவிட்டார். ஒரு கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் முன்னாள் அமைச்சர் காமராஜுடன் தோள் மீது கை போட்டு பேசி தான் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என மீடியா மூலம் தெரிவித்தார்.

கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி: அடேங்கப்பா, அமைச்சர் சொன்ன தகவல்!

இதனால் மன்னார்குடி குடும்பத்தில் குழப்பம் விலக வழி இல்லையா என விசாரித்தோம். திருமண விழாவில் அனைத்து குடும்ப பெண்களும் கலந்துகொண்டனர். பெண்கள் இணைந்துவிட்டாலே குடும்பம் இணைந்தது மாதிரிதான். அடுத்தடுத்த நாள்களில் இரு தரப்பும் ராசியாகிவிடும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி