ஆப்நகரம்

வேலூர்: மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்த விவகாரம்..! ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..

வேலூர் மாவட்டத்தில் சொத்துக்காக தாயை கொலை செய்த மகன் மற்றும் மருமகளுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.

Samayam Tamil 5 Nov 2019, 3:19 pm
2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காட்பாடியை உலுக்கிய சம்பவம்தான் இது. காட்பாடி ஈசன் ஓடை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். விவசாயி தொழிலை செய்து வந்தவரான இவருக்கு ராணியம்மாள் என்ற மனைவியும் மற்றும் ஆறுமுகம் , ஆனந்தி, பொன்னியம்மாள் ஆகிய மகன், மகள்கள் உள்ளனர்.
Samayam Tamil son and daughter in law sentenced to life imprisonment for murdering mother in katpadi
வேலூர்: மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்த விவகாரம்..! ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..


வேலாயுதத்திற்கு 7 ஏக்கர் நிலம் ஒன்று இருந்தது. இதன் மதிப்பு அப்போதே 1 கோடி வரை இருந்துள்ளது. ஆகையால், அந்த நிலத்தை தன் மீது எழுதி வைக்குமாறு ஆறுமுகம் தனது தந்தை வேலாயுதத்திடம் கேட்டுள்ளார்.

ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குநர் விஜய், கௌதம் மேனனுக்கு சம்மன்

ஆனால் அதில் மகள்களுக்கு உரிமை உண்டு எனவே இப்போது விற்க அவசியமில்லை என அவர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தந்தை என்று கூட பாராமல், அவர் மீது கல்லை போட்டு கொன்றுள்ளார்.

இதனால் சிறைக்கு சென்று விடுதலையான அவர் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தேதி இதே காரணத்தினால் தனது மனைவியின் உதவியுடன் தாய் ராணியம்மாளை தலையணை கொண்டு மூச்சை அமுக்கி கொன்றுள்ளார்.

திருவள்ளுவர் விஷயத்தில் மு.க. ஸ்டாலினை பாஜக குறி வைப்பது ஏன்?

தாயை கொன்றுவிட்டு நாடகமாடி வந்த ஆருமுகம் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கைதாகி இன்று வரை விசாரணை நடந்து வந்தது. இதையடுத்து வேலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ஆறுமுகம் மற்றும் அவரது மனைவிக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

அடுத்த செய்தி