ஆப்நகரம்

சுதாகரன் விடுதலையில் சசிகலா ஆடும் அரசியல் கேம்!

சுதாகரன் விடுதலை தாமதமாவதன் பின்னனியில் சசிகலா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Dec 2020, 9:10 am
சுதாகரன் ஒரு சில நாள்களில் விடுதலையாவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவரது விடுதலை தள்ளிப்போய் வருவதற்கான காரணமாக சொல்லப்படும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. சசிகலா விடுதலை தள்ளிப்போய் வருவதற்கு அரசியல் காரணம் இருக்கும் என கூறப்படும் நிலையில் சுதாகரன் விடுதலை தள்ளிப்போய் வருவதற்கு சசிகலா தான் காரணமாக இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
Samayam Tamil sources said sasikala is behind the delay in sudhakaran release
சுதாகரன் விடுதலையில் சசிகலா ஆடும் அரசியல் கேம்!



எப்போது விடுதலை?

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது நான்கு ஆண்டு தண்டனைக் காலம் பிப்ரவரி 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த வழக்கில் இவர்கள் ஏற்கெனவே தண்டனை அனுபவித்த நாள்களை கழித்தால் முன்கூட்டியே மூவரும் வெளிவர வாய்ப்புள்ளது.

செலுத்தப்படாத அபராதத் தொகை!

சசிகலா இருமுறை பரோலில் வெளிவந்த நாள்களை கணக்கில் எடுத்தால் ஜனவரி 27ஆம் தேதி வெளியாகலாம் என்று கர்நாடக சிறைத்துறை கூறியது. இதனால் இளவரசி, சுதாகரன் சசிகலாவுக்கு முன்னரே விடுதலையாக உள்ளனர். அதாவது பொங்கலுக்கு முன்னரே இளவரசி விடுதலையாவார் என கூறுகிறார்கள். இதில் சுதாகரன் ஜாமின் கிடைக்காமல் சிறையில் இருந்த நாள்களை கணக்கில் எடுத்துக்கொண்டு முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். அபராதத் தொகையான 10 கோடியே, 10 லட்சம் ரூபாயை அவர் செலுத்தினால் எந்நேரமும் விடுதலையாவார் என கூறப்பட்டது.

சசிகலா போட்ட முட்டுக்கட்டை!

சசிகலா, இளவரசி ஆகியோருக்கான அபராதத் தொகை செலுத்தப்பட்டுள்ள நிலையில் சுதாகரனுக்கான அபராதத் தொகை இன்னும் செலுத்தப்பட வில்லை. அவரது நண்பர்கள் அபராதத் தொகை செலுத்த தயாராக உள்ளபோதும் சசிகலா தரப்பு அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறுகிறார்கள் கர்நாடக சிறைத்துறை வட்டாரத்தில்.

அடக்கொடுமையே ரூ.2,500 பொங்கல் பரிசு கிடைக்காதா? தமிழக மக்கள் அதிர்ச்சி!

விடுதலையை தடுக்க என்ன காரணம்?

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனுக்கும் அவரது உறவினர் சசிகலாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை சரிவர இல்லை. சசிகலா, இளவரசி மீது சுதாகரன் அதிருப்தியில் உள்ளார் என்றும் கூறுகிறார்கள். இதனால் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டால் வெளியே போய் தன்னைப் பற்றி சுதாகரன் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துவிடக் கூடாது என சசிகலா நினைக்கிறார் என்கிறார்கள்.

அதிருப்தியில் சுதாகரன்

எம்ஜிஆர் ஆட்சிக்கு என்ன தேவை? கமல், ரஜினிக்கு இந்த விஷயம் தெரியாதா?

இந்த நான்கு ஆண்டுகளில் சுதாகரனை பார்க்க அவரது மனைவி சத்யவதி, நண்பர்கள் என மூன்று பேர், மூன்று முறை மட்டுமே சென்றுள்ளனர். மன்னார்குடி குடும்பத்தினரும் சசிகலா, இளவரசியை பார்த்துவிட்டு வந்துவிடுகின்றனர் என்றும் சுதாகரனிடம் பேசுவதில்லை என்றும் கூறுகிறார்கள். ஒருவேளை சுதாகரன் முன்கூட்டியே விடுதலையானால் இந்த மனகசப்பின் பின்னால் உள்ள சங்கதிகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி