ஆப்நகரம்

தீபாவளி...அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு?

தீபாவளி பண்டிகையொட்டி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 13 Oct 2020, 11:55 am
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை, கரும்பு, பொங்கல் தொகுப்பு பொருட்களுடன், ஆயிரம் ரொக்கப் பரிசையும் தமிழக அரசு ஆண்டுதோறும் அளித்து வருகிறது.
Samayam Tamil two thousand


இந்நிலையில். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் மாதக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகையை அவர்கள் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு இந்த ரொக்கப் பரிசை வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழகத்துக்கு வந்த முதலீடு... பெருகும் வேலைவாய்ப்பு!

அத்துடன், கொரோனாவை காரணங்காட்டி பொங்கல் பண்டிக்கைக்கும் 1,000 ரூபாய் பதிலாக கூடுதல் தொகை அளிப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 1,000 ரூபாய் நிவாரணத் தொகையாக தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், மே மாதம் இறுதிவரை முழுபொதுமுடக்கமும், அதன்பின் பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடனும் பொதுமுடக்கம் அமலில் இருப்பதாலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள தொடர்ந்து வலி.யுறுத்தி வந்தன.

ரஜினி வந்தால் என்ன நடக்கும்? வராவிட்டால் என்ன செய்யவேண்டும்? இபிஎஸ் போடும் திட்டம்!

ஆனால், ஏப்ரலில் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியதுடன் சரி... அதன்பின் ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்குவதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாதந்தோறும் அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கசிந்துள்ள தகவல், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி