ஆப்நகரம்

நடிகர் ரஜினிகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி என தகவல்

Samayam Tamil 28 Oct 2021, 9:45 pm
நடிகர் ரஜினிகாந்த் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவதிபட்டு வந்த நிலையில் சிங்கபூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அப்போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் சென்னைக்கு வந்தவர் நீண்ட ஓய்வுக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
Samayam Tamil rajini file pic


அதனை தொடர்ந்து மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் அமெரிக்காவுக்கு சென்று இரண்டாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையையும் செய்து கொண்டார். இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஒய்வு பெற்று வருபவர் அவ்வப்போது உடல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே வழங்கப்பட்டது. திரையுலகின் மிக பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை ரஜினி பெற்றுக்கொண்டது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

'அந்த எண்ணம்தான் சார்'... நீர்வீழ்ச்சி சம்பவத்துக்கு கமல் பாராட்டு..!

அதனை தொடர்ந்து, அண்ணாத்த படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்றதாக வெளியாகியுள்ள செய்திகள் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ''ரஜினி வழக்கமான பரிசோதனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக'' அவரது மனைவி லதா தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி விரைந்து குணமாக வேண்டும் என பலரும் ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி