ஆப்நகரம்

புரேவி புயல்: எங்கெல்லாம் கன மழை பெய்யும் தெரியுமா?

Tamil Nadu Rains: தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற உள்ளது.

Samayam Tamil 1 Dec 2020, 9:02 am
வங்கக் கடலில் கடந்த வாரம் நிவர் புயல் உருவாகி புதுச்சேரி மரக்காணம் இடையே கரையைக் கடந்து வட மாவட்டங்களுக்கு கனமழையை கொடுத்தது. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளுக்கும் மழையைத் தந்தது. இந்நிலையில் இன்று உருவாகும் புதிய புயல் தென் தமிழகத்திற்கு கனமழை கொடுக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil Burevi Cyclone


உருவாகும் இந்தப் புயலுக்கு புரேவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது நாளை இலங்கையை கடந்து குமரி கடலில் நிலை கொள்ளும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.

அடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

இன்று (டிசம்பர் 1ஆம் தேதி) காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நாளை (டிசம்பர் 2) மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளும். இது குமரி கடல் பகுதியில் 2 நாட்கள் நிற்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புரேவி புயலால் தென் தமிழகத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவிலும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. குமரி கடற்கரையில் கரையைக் கடந்து கேரளா சென்று அரபிக்கடலுக்கு செல்ல உள்ளது. கேரளாவில் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த செய்தி