ஆப்நகரம்

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: பொதுமக்களே உஷார்

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 22 Nov 2016, 4:21 pm
சென்னை: தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil south tamilnadu will get heavy rain in next 24 hours says imd
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: பொதுமக்களே உஷார்


இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக கூறியுள்ளது. இதனால் தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவ மழை கால தாமதமாக, கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. ஆனால் 2 நாட்களுக்கு மட்டுமே பெய்தது. இதன்காரணமாகவும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சாத்தான்குளத்தில் 5 செ.மீ. மழையும், மயிலாடி மற்றும் கன்னியாகுமரியில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

South Tamilnadu will get heavy rain in next 24 hours says IMD.

அடுத்த செய்தி