ஆப்நகரம்

வெளுத்துக் கட்டப் போகும் கோடை மழை; முன்கூட்டியே வருகிறது தென்மேற்கு பருவமழை!

தமிழகத்தில் முன்கூட்டியே தென்மேற்குப் பருவமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 May 2018, 1:18 am
கோவை: தமிழகத்தில் முன்கூட்டியே தென்மேற்குப் பருவமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil TN Rains
தென்மேற்குப் பருவமழை


தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை 10 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கும். அந்தமானில் வரும் 19 அல்லது 20ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

கேரளாவில் வரும் 22ஆம் தேதி மழை தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி பகுதிகளில் 23ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்யும்.

தமிழகத்தின் மற்றப் பகுதிகளில் வெப்பச் சலன மழை பெய்யும். வரும் 12ஆம் தேதி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். சென்னையில் வரும் 14ஆம் தேதி முதல் சென்னையில் மழை பெய்யும்.

கடந்த ஆண்டைப் போல் அல்லாமல், நடப்பாண்டில் நிலத்தடி நீர் அளவு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

South West Monsoon to start with in 10 days.

அடுத்த செய்தி