ஆப்நகரம்

tamil nadu private train: தமிழ்நாட்டில் தனியார் ரயில் சேவை: யாருக்கு லாபம்?

தனியார் ரயில் சேவை மூலமாக, ரூ.2.50 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Jul 2022, 12:29 pm
பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், கோவையிலிருந்து ஷீரடிக்கு இயக்கப்பட்ட முதல் தனியார் ரயில்சேவை மூலமாக, ரூ.2.50 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Samayam Tamil private train service


இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தனியார் வசம் சென்று கொண்டிருக்கிறது. அரசிடமிருக்கும் போது குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை பெற்று வந்த நிலையில் தனியார் வசம் பொதுத்துறை நிறுவனங்கள் செல்லும் போது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள்.

இந்நிலையில் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிக் கொண்டிருப்பதோடு, பல கோடி பேருக்கு நியாயமான விலையில் போக்குவரத்து வசதியை கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தியன் ரயில்வே தனியார் மயமாகும் காலம் வெகு விரைவில் வந்துவிட்டதாக கூறுகிறார்கள். இந்த கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் ஆங்காங்கே தனியார் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
அதிமுக மீன் பிடித்திருவிழா: ஸ்டாலின் போடும் தூண்டில்? வலையோடு வரும் பாஜக!
இந்திய மற்றும் வெளிநாட்டு மக்கள், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களையும், பாரம்பரிய, கலாச்சார சிறப்புமிக்க இடங்களையும் சுற்றிப்பார்க்கும் வகையில், பாரத் கவுரவ் திட்டத்தை இந்திய ரயில்வே கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், தனியார் ரயில் சேவை அளிக்க விரும்புவோர், தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அழைப்பு விடுத்தது.

இதை தொடர்ந்து, சவுத் ஸ்டார் ரயில் என்ற நிறுவனம் பதிவு செய்து, கோயம்புத்தூர்-ஷீரடிக்கு பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் முதல் சேவையைத் தொடங்கியது.

இதேபோல, டிராவல் டைம்ஸ் இந்தியா நிறுவனம் பதிவுசெய்து, இரண்டாவது ரயில் சேவையை மதுரையில் இருந்து வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. `திவ்ய காசி-ஆடி அமாவாசை காசி யாத்திரை ரயில்' என்ற பெயரில் இந்த ரயில் இயக்கப்படஉள்ளது.
AIADMK General council: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இதேபோல, 7 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்து, அடுத்தடுத்து ரயில் சேவையை அளிக்க உள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாரத்கவுரவ் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர்- ஷீரடிக்கு ரயில் சேவை இயக்கப்பட்டது. இதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.2.50 கோடி வருவாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான கட்டணத்தைவிட அதிகமாக செலுத்த வேண்டியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

அடுத்த செய்தி