ஆப்நகரம்

சென்னை, நெல்லை இடையே இன்று சுவிதா சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

இன்று சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

TOI Contributor 11 Aug 2017, 4:01 am
இன்று சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Samayam Tamil southern railway to run suvidha special train between chennai egmore and tirunelveli
சென்னை, நெல்லை இடையே இன்று சுவிதா சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னையில் இருந்து நெல்லைக்கு வண்டி எண் 82603 சிறப்பு சுவிதா ரயிலை இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. சனிக்கிழமை முதல் தொடா் விடுமுறைகள் வருவதால் மக்களின் வசதிக்காக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 11.45 மணிக்கு இந்த ரயில் புரப்படுகிறது. மறு நாள் பகல் 12.40 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. படுக்கை வசதியுடன் கூடிய 13 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று மாலை 6 மணிக்கு தொடங்குகியது.

Southern Railway to run Suvidha special train between Chennai Egmore and Tirunelveli

அடுத்த செய்தி