ஆப்நகரம்

தென்மேற்கு பருவமழை தொடங்கியது: துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 May 2018, 11:56 am
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையி ல், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil rainn
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது; கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை ஒட்டி பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.

கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. அது மியான்மரை நோக்கி நகர்ந்து செல்கிறது.

துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை!


தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் இன்று(மே-30) தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, ராமேஸ்வரம் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மீனவர்கள், கேரளா, கர்நாடகா, குமரி, அந்தமான், நிக்கோபார் தீவுகளில் மே 31 -ம் தேதிவரை கடலுக்குச் செல்லவேண்டாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த செய்தி