ஆப்நகரம்

தென் மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்பே தொடங்கும்: ஸ்கைமெட் அறிவிப்பு!

தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 4 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கும் என்று ஸ்கைமெட் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 13 May 2018, 3:23 pm
தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 4 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கும் என்று ஸ்கைமெட் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain
தென் மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்பே தொடங்கும்: ஸ்கைமெட் அறிவிப்பு!


கேரளா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, ஒடிசா தமிழகம் ஆகிய பகுதிகளில், தென் மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். அந்தவகையில் வழக்கமாகத் தென் மேற்கு பருவமழை என்பது ஜூன் முதல் தேதி அல்லது அடுத்த சில நாட்களில் தொடங்கும்.

ஆனால், இந்தாண்டு தென் மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக சற்று முன்கூட்டியே அதாவது மே 28-ம் தேதி தொடங்கும் என தனியார் வானிலை மையமான ஸ்கைமெட் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனியார் வானிலை மையமான ஸ்கைமெட்டின் துணைத் தலைவர் மகேஷ் பலாவத் கூறுகையில், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வரும் 20-ம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கையிலும் 4 நாட்கள் முன்கூட்டியே பருவமழை தொடங்கும். இதனால் கிழக்கு மத்திய வங்கக் கடலிலும் பருவமழை முன்கூட்டியே அதாவது 24-ம் தேதி தொடங்கும்.

பருவமழை அந்தமானில் முன்கூட்டியே தொடங்குவதன் காரணமாக கேரளாவில் பருவமழை 4 நாட்கள் முன்பாகவே அதாவது மே 28ம் தேதியே தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஜுன் 1ம் தேதி பருவமழை தொடங்குவதற்கு பதிலாக இந்த ஆண்டு 4 நாட்கள் முன்னதாக தொடங்கும்.

மழையைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு இயல்பான மழைக்கு குறைய வாய்ப்பில்லை. ஆனால் அதே நேரத்தில் இயல்புக்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஸ்கைமெட்டின் துணைத் தலைவர் மகேஷ் பலாவத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி