ஆப்நகரம்

அன்புமணியுடன் கெத்தாக வந்திறங்கிய செளமியா அன்புமணி.. மாமாவுக்கு புகழாரம் சூட்டி நெகிழ்ச்சி

தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றால் தான் என்னவெல்லாம் செய்வேன் என்று செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், ராமதாஸை மாமா என்று கூறாமல், அரசியல் மொழியில் பேசி அனைவரையும் வியக்க வைத்தார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 25 Mar 2024, 5:50 pm
தர்மபுரி: பாமகவின் தர்மபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செளமியா அன்புமணி, இன்று (மார்ச் 25) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது மாமனார் ராமதாஸை புகழ்ந்து தள்ளினார்.
Samayam Tamil MixCollage-25-Mar-2024-05-49-PM-6176


நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக களம் காண்கிறது. முதலில் அதிமுகவுடன் தான் பாமக கூட்டணி அமைப்பதாக இருந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தையும் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கிட்டத்தட்ட கூட்டணி உறுதியானதாக தகவல்கள் வந்தன. ஆனால், அடுத்த நாளே பாஜக கூட்டணியில் பாமக சேர்ந்ததாக செய்தி வந்து அனைவரையும் அதிர வைத்தது.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதையே ராமதாஸ் விரும்பியதாகவும், ஆனால், அன்புமணி ராமதாஸின் வற்புறுத்தலின் பேரிலேயே பாஜகவுடன் கூட்டணி அமைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பாமகவுக்கு 10 தொகுதிகளை பாஜக வழங்கி நிலையில், அதில் தர்மபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார்.

கட்டிப்பிடிச்சதை விடுங்க.. தமிழச்சி தங்கபாண்டியனை விளாசி தள்ளிய தமிழிசை.. "யார் ஒரிஜினல் தமிழச்சி"

இந்நிலையில், தனது கணவர் அன்புமணியுடன் இன்று வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார் செளமியா அன்புமணி. இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வந்திருக்கிறேன். பாமக வேட்பாளராக எனக்கு வாய்ப்பு அளித்த எங்களின் நிறுவனர், சமூக நீதிப் போராளி, பெண்ணுரிமை காவலர், மக்கள் காவலர் மருத்துவர் ஐயாவின் பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்கி எனது நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரப்பன் சமாதியில் சபதம் எடுத்த மகள் வித்யாராணி.. "சீமான் என் சித்தப்பா".. இனி என் ஆட்டத்தை பாருங்க

தர்மபுரியில் நான் வெற்றி பெற்றால், காவிரி தர்மபுரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவதுதான் எனது முதல் பணியாக இருக்கும். இந்த திட்டத்துக்காக தர்மபுரி மக்கள் எத்தனையோ ஆண்டுகளாக போராடி வந்திருக்கிறார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவது தான் எனது குறிக்கோள் என செளமியா அன்புமணி தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி