ஆப்நகரம்

எஸ்.பி.பி.யின் மறைவு நிரப்ப முடியாத அமைதி: கனிமொழி ட்வீட்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 25 Sep 2020, 2:56 pm
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் விளைவாக கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த அவருக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
Samayam Tamil கனிமொழி
கனிமொழி


அதன் தொடா்ச்சியாக எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, அவரது நுரையீரல்களின் செயல்பாடுகள் படிப்படியாக மேம்படத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த புதன்கிழமை மாலை அவரது உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த தகவலை அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையும் உறுதிபடுத்தியது.

கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பார் எஸ்பிபி - அமித் ஷா இரங்கல்


அந்த வகையில், “ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது. நிரப்பமுடியாத அமைதி” என திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி