ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம்: சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆவன செய்யும் அவசரச்சட்டத்தின் முன்முடிவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

TNN 23 Jan 2017, 5:24 pm
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆவன செய்யும் அவசரச்சட்டத்தின் முன்முடிவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
Samayam Tamil special tamilnadu assembly to pass jallikattu ordinance bill
ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம்: சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர்


தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட முன்முடிவை சட்டமாக நிறைவேற்றுவதற்காக, இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த ஆவன செய்யும் அவசரச்சட்டத்தின் முன்முடிவை தாக்கல் செய்தார். இது, குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும்.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும், விலங்குகள் வதைத்தடுப்புச் சட்டத்தில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் அதிகார்பூர்வமாக நீக்கப்படும். இந்தக் கூட்டத்தை சட்டப்பேரவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களும் ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களும் காண்கின்றனர்.

அடுத்த செய்தி