ஆப்நகரம்

திருப்புகழ் திருப்படி விழா : திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருத்தணி முருகன் கோவில் திருப்புகழ் திருப்படி விழா இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

TNN 31 Dec 2016, 10:54 am
திருத்தணி முருகன் கோவில் திருப்புகழ் திருப்படி விழா இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Samayam Tamil special train to thiruthani
திருப்புகழ் திருப்படி விழா : திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்


அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் வரும் 31-ஆம் தேதி திருப்புகழ் திருப்படி திருவிழாவும், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வர்.

இதற்காக அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயிலே வெளியிட்டுள்ள செய்ட்கி குறிப்பில் "அரக்கோணத்தில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு மின்சார ரயில் இரவு 10.20 மணிக்கு திருத்தணி சென்றடையும். மீண்டும் திருத்தணியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு மின்சார ரயில் இரவு 10.50 மணிக்கு அரக்கோணம் போய்ச்சேரும்.

அரக்கோணத்தில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்படும் சிறப்பு மின்சார ரயில், இரவு 11.30 மணிக்கு திருத்தணி சென்றடையும். மீண்டும் திருத்தணியில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு மின்சார ரயில் இரவு 12 மணிக்கு அரக்கோணம் போய்ச்சேரும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி