ஆப்நகரம்

Special Trains: புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Samayam Tamil 22 Dec 2018, 7:58 am
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Samayam Tamil Train


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் (எழும்பூா்) இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 12ம் தேதி இரவு 10.20 மணிக்கும் ஜனவரி 25, பிப்ரவரி 15 ஆகிய தேதிகளில் இரவு 10.15 மணிக்கும் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமுனையில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு (எழும்பூா்) ஜனவரி 6, 15, 27ம் தேதி மாலை 3 மணிக்கும் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ஜனவரி 11, பிப்ரவரி 8 ஆகிய தேதிகளில் இரவு 10.20 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறு மாா்க்கத்தில், ஜனவரி 20, பிப்ரவரி 10, 17 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு மாலை 3 மணிக்கும், ஜனவரி 16ம் தேதி மாலை 6.15 மணிக்கும் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


மேலும் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 13ம் தேதி மாலை 5.15 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 1, 15 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமுனையில் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 8, 22, 29, பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில் மாலை 4.15 மணிக்கு இயக்கப்படுகிறது.



சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு ஜனவரி 16ம் தேதி காலை 5.30 மணிக்கும், மறு மாா்க்கத்தில் திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மாலை 3 மணிக்கும் சிறப்புக்கட்டண ரயில் இயக்கப்படுகிறது.


இந்த ரயில்களில் உள்ள ஏசி பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான முன்பதிவு இன்று (22ம் தேதி) காலை 8 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி