ஆப்நகரம்

தமிழ்நாடு மீனவர்களிடம் கொரோனா சோதனை!

நெடுந்தீவு அருகே எல்லை மீறி மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அங்குள்ள காங்கேசன் முகாமில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்களிடம் கொரோனா தொற்று தொடர்பான சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jan 2020, 6:08 pm
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டி 11 மீனவர்களையும் கைது செய்து, விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்குக் கூட்டிச் சென்றனர்.
Samayam Tamil download


இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் நெடுந்தீவு அருகே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகத் தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் கைதான மீனவர்களைக்
கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 11 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் அந்நாட்டில் உள்ள ஊர்காவல் அரசு வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்று அங்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துள்ளனர்.

நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுமா? - நாளைக்கு தெரிஞ்சிடும்!!

ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் தொடர்ந்து 11 மீனவர்களை ஆஜர்படுத்தப்படுத்தினர். நீதிமன்றம் அவர்களை வரும் பிப்ரவரி 11ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

பொதுவாகத் தமிழ்நாடு மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கும் போது, ஆழ்கடல் பகுதியை நோக்கிச் செல்கின்றனர். அப்போது சர்வதேச கடல் எல்லை அருகே செல்லும் சூழல் உருவாகிறது. இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளுக்கு அருகே வந்ததாக இலங்கை கடற்படையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மணமேடைக்குச் சென்ற இந்து பெண்ணை கடத்தி திருமணம்... பாகிஸ்தானில் பரபரப்பு..!

அதுமட்டுமல்லாமல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மேலும் தமிழக மீனவர்களைக் கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துவிடுகின்றனர். இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி