ஆப்நகரம்

சென்னை விமானங்களை ரத்து செய்தது இலங்கை அரசு

இலங்கையில் இருந்து சென்னை செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

TNN 12 Dec 2016, 3:48 pm
இலங்கையில் இருந்து சென்னை செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil sri lankan airlines cancels all flights to chennai
சென்னை விமானங்களை ரத்து செய்தது இலங்கை அரசு

வர்தா புயல் காரணமாக சென்னையில் கடும் சூறாவளிக்காற்றும் பலத்த மழையும் நிலவுவதால் சென்னைக்குச் செல்லும் விமானங்களை அனைத்தையும் இலங்கை ரத்து செய்துள்ளது.

இது பற்றிய அறிவிப்பை வெளியிட்ட இலங்கை விமானத்துறை செய்தித்தொடர்பாளர் தீபால் பெரேரா, சென்னை செல்லும் இலங்கை விமானங்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை வரை ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இலங்கை அரசு ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி