ஆப்நகரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு!

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த இலங்கை மீனவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 50-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 30 Dec 2018, 9:56 am
ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது, இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு!
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு!


ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், கச்சத்தீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இலங்கை மீனவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 50-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்தன.

இதனிடையே அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினரும், ராமேஸ்வரம் மீனவர்களை திரும்பிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் மீன் பிடிக்காமல் பாதியிலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். சமீப காலமாக கச்சத்தீவு பகுதியில் முகாமிட்டுள்ள இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை அப்பகுதியில் வரவிடாமல் தடுத்து வருகின்றனர்.

தற்போது இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களுக்கு எதிராக களமிறங்கியுள்ளது ராமேஸ்வரம் மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி