ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அமைச்சருக்கு திமுக கடிதம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 28 Oct 2020, 11:20 am
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 600க்கும் கூடுதலான படகுகளில் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
Samayam Tamil tamil nadu fisher men


அந்தப் பகுதிக்கு ஐந்து ரோந்து படகுகளில் நேற்று (அக்டோபர் 27) காலை வந்த சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசிக் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

மேலும் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியுள்ளனர். சிங்களப் படையினரின் தாக்குதலில் இரு மீனவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்துள்ளன.

அடுத்த கட்ட பொது முடக்கம்: முதல்வர் நடத்தும் ஆலோசனை!

கடந்த 10 நாட்களில் இது இரண்டாவது தாக்குதல் சம்பவம் ஆகும். ஏற்கனவே கடந்த 18ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டி அடித்தனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் போடும் உத்தரவு!

அதில், “நம் நாட்டின் மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் தூதரக முயற்சிகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது இந்திய மீனவர்களாகவே இருந்தாலும் - அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே என்ற அலட்சிய மனப்பான்மையோ என்ற சந்தேகம் வருகிறது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த செய்தி