ஆப்நகரம்

குடியுரிமை வழங்கிட வலியுறுத்தி இலங்கை அகதிகள் சேலம் ஆட்சியரிடம் கோரிக்கை!

தமிழகம் முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 8 முகாம்களில் சுமார் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

Samayam Tamil 15 Jul 2019, 5:58 pm
தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கிட வலியுறுத்தி, சேலத்தில் உள்ள இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil குடியுரிமை வழங்கிட வலியுறுத்தி இலங்கை அகதிகள் சேலம் ஆட்சியரிடம் கோரிக்கை!
குடியுரிமை வழங்கிட வலியுறுத்தி இலங்கை அகதிகள் சேலம் ஆட்சியரிடம் கோரிக்கை!


தமிழகம் முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 8 முகாம்களில் சுமார் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1990 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இன கலவரத்தினால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இவர்கள் மூன்று தலைமுறையாக சேலத்திலேயே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் உள்ள பல்வேறு முகாம்களை சேர்ந்த இலங்கை அகதிகள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில்; கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாகவே வசித்து வருகிறோம். தங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்தாலும், அடிப்படை உரிமைகள் இல்லாத நிலையே தொடர்கிறது. இந்திய குடியுரிமை கிடைக்க பெறாததால், முகாமில் உள்ள இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருவது மட்டுமல்லாமல், மருத்துவம், பொறியியில் உள்ளிட்ட பட்ட படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் இளைய சமுதாயம் மிகவும் பாதிக்கபட்டு வருகிறது.

எனவே தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அளித்து உள்ளதாக தெரிவித்தனர். முகாம்களில் உள்ள இளைஞர்கள் தினகூலி வேலைக்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலை மட்டுமே உள்ளதாகவும், தனியார் நிறுவனத்தில் கூட வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் இந்திய குடியுரிமை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அடுத்த செய்தி