ஆப்நகரம்

இலங்கை குண்டுவெடிப்பு; மீனாட்சியம்மன் கோவிலுக்கு பலப்படும் பாதுகாப்பு

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மதுரை மாநகர காவல்ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் கோவில் பிரகாரம் மற்றும் 4 பகுதிகளில் உள்ள நுழைவாயில்களிலும் நேரில் ஆய்வுமேற்கோண்டார்.

Samayam Tamil 28 Apr 2019, 9:43 am
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மதுரை மாநகர காவல்ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் கோவில் பிரகாரம் மற்றும் 4 பகுதிகளில் உள்ள நுழைவாயில்களிலும் நேரில் ஆய்வுமேற்கோண்டார்.
Samayam Tamil 190421 NE Colombo Church explosion4

ஏற்கனவே மீனாட்சியம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் 150 பேர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 157 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்குள் வரும் அனைத்து பக்தர்களும் சோதனைக்கு உட்படுத்தபட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவில் பிரகாரம் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது. மாசி வீதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தும் முழுமையாக கண்காணிப்பட்டுவருகிறது. ஏதேனும் சந்தேகப்படும்படியான நபர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது.

இதனிடைய இலங்கை குண்டுவெடிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் காவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் குடும்பத்தினர் உரிய சோதனைக்கு உட்படுத்தாமல் செல்போனுடன் அனுமதிப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டினா்.

அடுத்த செய்தி