ஆப்நகரம்

திருமணத்திற்கு சென்றதைப் போல சென்ற வருமான வரித்துறையினர்!!

சசிகலாவின் சொந்தங்கள் வீடுகளில் ரெய்டு நடத்த வருமான வரித்துறையினர் 300 கார்களை வாடகைக்கு அமர்த்தி அந்தக் கார்களில் ''Srini weds Mahi'' என்ற ஸ்டிக்கர் ஒட்டி திருமணத்திற்கு செல்வதைப் போன்று ரெய்டுக்கு சென்றனர்.

TOI Contributor 10 Nov 2017, 1:01 pm
சசிகலாவின் சொந்தங்கள் வீடுகளில் ரெய்டு நடத்த வருமான வரித்துறையினர் 300 கார்களை வாடகைக்கு அமர்த்தி அந்தக் கார்களில் ''Srini weds Mahi'' என்ற ஸ்டிக்கர் ஒட்டி திருமணத்திற்கு செல்வதைப் போன்று ரெய்டுக்கு சென்றனர்.
Samayam Tamil srini weds mahi wedding party raids sasi clan premises
திருமணத்திற்கு சென்றதைப் போல சென்ற வருமான வரித்துறையினர்!!


இதுவரை தமிழக்த்தில் நடந்த ரெய்டுகளில் வருமான வரித்துறையினர் தங்களது சொந்த வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். முதன் முறையாக நேற்று 300 கார்களை வாடகைக்கு அமர்த்தி, அதில் ''Srini weds Mahi'' என்ற ஸ்டிக்கர் ஒட்டி ரெய்டில் ஈடுபட்டனர். ரெய்டு ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வருமான வரித்துறை அதிகாரிகளை அவர்களது இடத்தில் இறக்கி விடும் வரை செல்போன் பயன்படுத்த கார் டிரைவர்களை அனுமதிக்கவில்லை. பல டிரைவர்கள் அவர்களது சொந்தக் காரை ஓட்டி வந்துள்ளனர். பெரிய அளவில் போலீஸ் பந்தோபஸ்துடன் இந்த ரெய்டு இன்றும் நடந்து வருகிறது.

சசிகலாவின் குடும்பத்தினா், நண்பா்கள் உள்ளிட்டோா் தொடா்பான இடங்களில் வருமான வரி சோதனை நேற்று தொடங்கிய நிலையில் 147 இடங்களில் இன்றும் நடந்து வருகிறது.

அடுத்த செய்தி