ஆப்நகரம்

ஸ்ரீரங்கம் கோவிலில் கன்னியாஸ்திரிகள் பைபிள் வாசித்ததாக பரவும் வதந்தி!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கேரளா கன்னியாஸ்திரிகள் பைபிள் வாசித்தாக வரும் செய்திகள் வதந்திகள் என்று கோயில் அறங்காவலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 14 May 2018, 4:24 pm
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கேரளா கன்னியாஸ்திரிகள் பைபிள் வாசித்தாக வரும் செய்திகள் வதந்திகள் என்று கோயில் அறங்காவலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil srirangam bible


திருச்சியில் பிரசத்திப் பெற்ற ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலிலுக்கு கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் வெள்ளை உடை அணிந்து கொண்டு வந்ததாகவும், கோயிலில் வைத்து பைபிள் வாசித்து விட்டு சென்றதாகவும் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், அவ்வாறு யாரும் கோயிலுக்குள் பைபிள் வாசிக்கவில்லை என்று ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாக அறங்காவலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது;

கேரளாவில் இருந்து கன்னியாஸ்திரிகள் சில பேர் சுற்றுலா பயணிகளாக வந்தது உண்மை தான். ஆனால், அவர்கள் பைபிள் எதுவும் வாசிக்கவில்லை. ஆயிரங்கால் மண்டபத்துக்குள் அவர்கள் சுற்றிபார்க்கும் போது, சில வலதுசாரி மக்கள் அவர்களை தடுத்தனர். கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம். ஆயிரங்கால் மண்டபம் என்பது தடைவிதிக்கப்பட்ட இடம் என்று இல்லை. ஆனால், அவர்கள் அணிந்திருந்த உடையைப் பார்த்த சில பேர், அவர்களை போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர்.

இவ்வாறு அறங்காவலர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி