ஆப்நகரம்

’சோடா பாட்டில் வீசுவேன்’ - கிரிமினல் வழக்கை சந்திக்கப் போகும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்!

தனது சர்ச்சைக்குரிய கூற்றுக்காக, ஜீயர் கிரிமினல் வழக்கை சந்திக்கப் போகிறார்.

Samayam Tamil 13 Feb 2018, 4:55 pm
சென்னை: தனது சர்ச்சைக்குரிய கூற்றுக்காக, ஜீயர் கிரிமினல் வழக்கை சந்திக்கப் போகிறார்.
Samayam Tamil srivilliputhur jeeyar likely to face criminal case for his soda bottle comment
’சோடா பாட்டில் வீசுவேன்’ - கிரிமினல் வழக்கை சந்திக்கப் போகும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்!


ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி, இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின.

அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதற்கிடையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இருமுறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த போது, எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட விடுதலை கழகம் முறையிட்டுள்ளது. அக்கழகத்தின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைரவேல் தொடர்ந்த வழக்கை, நீதிபதி ரமேஷ் விசாரித்தார்.

அப்போது காவல்துறையிடம் இருந்து, உரிய விளக்கம் பெறுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் விரைவில் கிரிமினல் வழக்கில் சிக்கப் போவதாக தெரிகிறது.

Srivilliputhur jeeyar likely to face criminal case for his 'soda bottle' comment.

அடுத்த செய்தி