ஆப்நகரம்

கொரோனா வைரஸ் எச்சரிக்கை: ரயில்வே பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்படுமா?

கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க ரயில்வே பயணிகளுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும் என எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா வலியுறுத்தியுள்ளார்

Samayam Tamil 17 Mar 2020, 5:46 pm
கோவை வின்சென்ட் சாலையில் எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு இலாபத்தில் இயங்கும் பல்வேறு துறைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது என தெரிவித்தார். இலாபத்தில் உள்ள எல்ஐசியை தனியாருக்கு விற்பனை செய்வது நியாயம் அல்ல எனவும், தனியாரிடம் வழங்கப்பட்ட ரயில்களில் மக்களுக்கு பெரியளவில் வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
Samayam Tamil ரயில்வே பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்படுமா



ரயில்வே தனியார் மயம் ஆவதால், இனி இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை கிடைப்பது அரிதாகும் எனவும், ரயில் வண்டிகளை விமானம் போல பார்க்க வேண்டிய நிலை வரும் எனவும் அவர் தெரிவித்தார். தனியார் ரயில்களில் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது எனவும், ரயில்வே தனியார் மயத்தை எதிர்த்து தேவைப்பட்டால் மத்திய அரசிற்கு அழுத்தம் தரும் போராட்டங்களை நடத்துவோம் எனவும் அவர் கூறினார்.

கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க நன்றாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும், ரயில்வே பயணிகளுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

கொரோனா அச்சுறுத்துதலையடுத்து மக்கள் யாரும் பொது இடங்களில் ஒன்றுகூட வேண்டாம் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் சென்னையில் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ரயில்சேவை என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒன்று. தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் வருகையை நம்பியே ரயில்சேவை இயங்கிவருவதால் பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்று பலரும் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி