ஆப்நகரம்

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்று வாங்கியாச்சா? முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது.

Samayam Tamil 23 Oct 2020, 8:44 am
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். ஆனால் நடப்பாண்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு தொடர்ந்து தள்ளி போடப்பட்டு வந்தது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. அப்போது, மாணவர்கள் நலன் கருதி உடனடியாக ஏன் தேர்வு நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதுபற்றி தமிழக அரசு ஆலோசித்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது.
Samayam Tamil SSLC Marksheet


அதன்பின்னரும் தேர்வு நடத்துவதற்கான சூழல் ஏற்படாத காரணத்தால், அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: திமுக போராட்டம் அறிவிப்பு!

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10ஆம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமும் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறலாம்.

கொரோனா பரவல் இருக்கும் சூழலில் பள்ளிக்கு வரும் போது மாணவர்கள், பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதேசமயம் போதிய சரீர இடைவெளி விட்டு மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி