ஆப்நகரம்

சசிகலாவுக்கு முன் 200, இப்போ 234 ..! ஸ்டாலின் போட்டுள்ள நம்பிக்கை கணக்கு

சசிகலா வருகைக்கு பிறகு தேர்தல் இலக்கை மாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின்

Samayam Tamil 9 Feb 2021, 5:35 pm
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். மேலும், கிராம கூட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு வரும் ஸ்டாலின் வரவிருக்கும் சட்ட சபை தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்ற நிலைப்பாட்டில் உள்ளார். இந்நிலையில் தான், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 200 இடங்களை வெல்வதே திமுகவின் இலக்கு என்று கூறியிருந்தார்.
Samayam Tamil sasikala mk stalin


இதற்கிடையில் சசிகலாவின் வருகையும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பும் திமுகவுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அதிமுகவில் இருந்து சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் நடையை கட்டினால், அதிமுகவின் சமநிலை உடைக்கப்படும். இந்த சூழலில், சசிகலாவுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்தினாலோ, அல்லது, போகிறவர்கள் போகட்டும் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்ள முடியாது என்று கூறினாலும், பிளவு என்பது அதிமுகாவுக்குத்தான்.

வெளிப்படையாக கூறினால், அதிமுகவில் பற்றி எரியும் தீயில் பிரதான எதிர்க்கட்சி குளிர் காயும் என்பதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், சசிகலா விடுதலையாகி தமிழகம் வரும் போதே, '' எது நடக்க வேண்டுமோ, இப்போது நடக்கும். அது நிச்சயம்'' என்று ஸ்டாலின் ட்வீட்டியிருந்தார்.

இன்னும் 15 நாட்கள் தான்; விவசாயிகளுக்கு அடுத்த ஹேப்பி நியூஸ் - முதல்வர் பழனிசாமி!

இந்நிலையில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 200 இடங்களை வெல்வதே திமுகவின் இலக்கு என்று கூறியிருந்த ஸ்டாலின், '' அது தவறு, நாங்கள் 234 தொகுதிகளையும் வெல்லப் போகிறோம் என்று புதுக்கோட்டையில் தமது கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்துகொண்டபோது பேசியுள்ளார். ஆனால், சசிகலா தரப்பு அதற்கு வாய்பளிக்காது என்பதுதான் உண்மை.

சசிகலா வருகைக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், '' ஆர்.கே.நகர் மற்றும் தேனி மாவட்டத்தின் ஒரு தொகுதியில் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன் எனவும், திமுகவே எங்களது எதிரி, பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது என்று கூறிவிட்டார். இதனால், சசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த பிளவையும் ஏற்படுத்தாது என்பது ஏறக்குறைய தெளிவாகிவிட்டது.

அடுத்த செய்தி