ஆப்நகரம்

​ கோவையில் அமைதி திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சமூக நல்லிணக்கத் தொட்டிலான தமிழகத்தில், கோவை-திருப்பூரில் அமைதி நிலவ அதிமுக அரசு காவல்துறைக்கு முழு சுதந்திரமளிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

TNN 24 Sep 2016, 11:04 pm
சென்னை: சமூக நல்லிணக்கத் தொட்டிலான தமிழகத்தில், கோவை-திருப்பூரில் அமைதி நிலவ அதிமுக அரசு காவல்துறைக்கு முழு சுதந்திரமளிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil stalin statement about kovai issue
​ கோவையில் அமைதி திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்



இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர மக்கள் செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதால் கோவை-திருப்பூர் மாநகரங்களில் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடியிருக்கிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.
சமூக நல்லிணக்கத் தொட்டிலான தமிழகத்தில், கோவை-திருப்பூரில் அமைதி நிலவ அதிமுக அரசு காவல்துறைக்கு முழு சுதந்திரமளிக்க வேண்டும் #Coimbatore pic.twitter.com/P3gaRIcE0a— M.K.Stalin (@mkstalin) September 24, 2016

வர்த்தக நிறுவனங்கள், வங்கி ஏ.டி.எம்.கள் என கண்களில் பட்டதை எல்லாம் அடித்து நொறுக்கியவர்கள் பாலசுப்பிரமணியம் என்ற காவலர் மீதும் கல் வீசி தாக்கியுள்ளனர்.இந்த வன்முறையை காவல்துறை முன்கூட்டியே உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது கவலைக்குரியது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் கொலையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் கண்டு நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட கடைகள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கி, தாக்குதலுக்குள்ளான காவலர் பாலசுப்பிரமணியத்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அரசு முன்வர வேண்டும்.

இது போன்ற கலவரங்கள் ஏற்படாமல் தடுத்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக காவல்துறைக்கு இருக்கிறது. அதற்கு ஏற்ற முழு சுதந்திரத்தை காவல்துறைக்கு அதிமுக அரசு அளித்து கோவை-திருப்பூர் மாவட்டங்களில் பூரண அமைதி திரும்ப உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் "என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி