ஆப்நகரம்

ஜெ., மெத்தனமாக இருந்தால் வேறு வகையான போராட்டம்: ஸ்டாலின் எச்சரிக்கை

சிறுவாணி விவகாரத்தில் தமிழக முதல்வர் மெத்தனமாக இருந்தால் வேறு வகையில் திமுக போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

TNN 3 Sep 2016, 2:13 pm
கோவை: சிறுவாணி விவகாரத்தில் தமிழக முதல்வர் மெத்தனமாக இருந்தால் வேறு வகையில் திமுக போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
Samayam Tamil stalin warns in dmk protest at coimbatore
ஜெ., மெத்தனமாக இருந்தால் வேறு வகையான போராட்டம்: ஸ்டாலின் எச்சரிக்கை


சிறுவாணியில் ஆணை கட்டும் கேரள அரசை எதிர்த்து திமுக சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: சிறுவாணியில் அணை கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும். அணை கட்ட ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தவறு. தமிழத்தின் அனுமதி இந்த விவகாரத்தில் பெறப்படவில்லை. இதனால் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது. எனவேதான், சிறுவாணி பிரச்சினை குறித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர திமுக வலியுறுத்தியது.

திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் என தெரிந்தே தான் சட்டப்பேரவையில் தீர்மனத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார். மக்கள் நலனுக்காக திமுக அதற்கு ஆதரவு அளித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற உதவியது.

மெத்தனமாக உள்ள தமிழக அரசை கண்டித்துதான் இன்று போராட்டம் நடத்துகிறோம். அதிமுக அரசு நினைத்தால் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால், அமைச்சரோ, மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம் என்று காலம் தாழ்த்தும் நோக்கில்தான் பதில் அளித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் உடனே உச்சநீதிமன்றம் ஓடி சென்று தடை உத்தரவு பெற்ற ஜெயலலிதா, சிறுவாணி அணை கட்ட விடாமல் ஏன் தடுக்கவில்லை என்பதே எனது கேள்வி. இந்த விவகாரத்தில் ஜெயலலிதா மெத்தனமாக இருந்தால் வேறு வகையில் திமுக போராட்டம் நடத்தும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அடுத்த செய்தி