ஆப்நகரம்

இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்தக்கோரி ஸ்டாலின் கடிதம்..!

இலங்கை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 28 Jan 2021, 12:29 pm
இலங்கையின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பும்படியாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 46வது கூட்டத்தில் இந்தியா செயல்படவும், இலங்கையில் 13வது அரசியல் சட்டத்திருத்தத்தைச் செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலையிடவும் வலியுறுத்தி தி.மு.க. எம்.பி.க்களும், ஸ்டாலினும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
Samayam Tamil file pic


அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

  • இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்திட நிறைவேற்றப்பட்ட ஐநா மனித உரிமை ஆணையத்தின் தீர்மானம் 40/1ஐ இலங்கை அரசு மதிக்கவில்லை.
  • 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்த உத்தரவாதத்திற்கு எதிராக மாகாண கவுன்சில்களின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் ஒவ்வொரு அரசும் நடந்துகொண்டிருக்கின்றன.
  • இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என இலங்கை தமிழர்களின் அரசியல் கட்சிகள் ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளன.
  • ஐநா மனித உரிமை ஆணையத்தில் 46 ஆவது கூட்டத்தில் தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறும் வரை பிரதமர் உறுதி செய்திட வேண்டும்.
  • இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்த தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
  • இலங்கையில் தமிழ் மக்கள் உரிமைகளுடனும் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பது உலகெங்கும் வாழும் தமிழர்களின் நீண்டகால தாகம்.
என மேற்கண்ட வலியுறுத்தல்களை குறிப்பிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், டிஜிமுக எம்பிக்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அடுத்த செய்தி