ஆப்நகரம்

Road accident: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சாலை விபத்துகளால் 993 போ் பலி

தமிழகத்தில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தேசிய மற்றும் மாநில நெஞ்சாலைகளில் நடைபெற்ற விபத்தில் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில குற்றப்பிரிவு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 4 Mar 2019, 3:24 pm
தமிழகத்தில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தேசிய மற்றும் மாநில நெஞ்சாலைகளில் நடைபெற்ற விபத்தில் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில குற்றப்பிரிவு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil dc-Cover-d0m88r6j86p36dqv8rrve0ucc3-20160607142715.Medi.


மாநில குற்றப்பிரிவு ஆணையம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் விபத்தில் பலியானவர்கள் குறுத்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 5,173 சாலை விபத்துகள் நடைபெற்றது. இதில் 993 பேர் கொல்லப்பட்டிருகின்றனர். இதில் 360 விபத்துக்கள் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்துகள் ஆகும். மாநில நெடுஞ்சாலையில் 332 விபத்துகள் நடைபெற்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் அகலம் 60-200 அடிகளாக இருக்கும். அதுவே மாநில நெடுஞ்சாலைகளின் அகலம் 20-60 அடிகளாக மட்டுமே இருக்கும்.

ஆனால் அகலம் குறைவாக உள்ள மாநில நெஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்தில் குறைந்த உயிரிழப்புகளே நடத்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சாலையை விரிவாக்க வேண்டும் என்று நிழல் தரும் மரங்களை வெட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறும்போது ‘ கடந்த 20 வருடங்களில் பல முறை சாலை பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இடையில் இடைவேளை இருக்கிறது. ஆனால் கிராமபுரங்களில் அமைக்கப்பட்ட தேசிய நெஞ்சாலைகளுக்கு இடையில் போதிய இடைவேளை இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் நிகழ்கிறது. அதிகரித்த வாகன விபத்துகளுக்கு சாலையை மட்டும் குற்றம் சொல்வது சரியான தீர்வை கொடுக்காது. சாலை விதிகள் மீறப்படுவதாலும் அதிக விபத்துகள் நடைபெறுகிறது’’ என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி