ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்.31 வரை அவகாசம் வேண்டும் – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31 வரை அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Jul 2019, 12:41 pm
2016ம் ஆண்டே தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
Samayam Tamil State election commission 123


தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், பல்வேறு காரணங்களால் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் தற்போது வரை 5 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்த தாமதமாவது குறித்து எதிர்க்கட்சிகள், ஆளும் தரப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது உள்ளாட்சித் தேர்தல் நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது.

சுமார் 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில், தற்போது அவகாசம் கோரப்பட்டுள்ளதால் அடுத்து வரும் 3 மாதங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாது என்பது உறுதியாகி உள்ளது.

அடுத்த செய்தி