ஆப்நகரம்

குழந்தையின் தலை துண்டான சம்பவம்: சுகாதாரத்துறை செயலாளர் , இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ,பொது சுகாதாரத்துறை இயக்குநர் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Samayam Tamil 21 Mar 2019, 6:14 pm
பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ,பொது சுகாதாரத்துறை இயக்குநர் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Samayam Tamil Newborn-Sessions-1999x1428


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி பொம்மி என்ற பெண் நள்ளிரவில் பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் பொம்மிக்கு செவிலியர்களே பிரசவம் பார்த்ததாக கூறப்பட்டது. பிரசவத்தின்போது குழந்தை தலை துண்டானதாக செய்திகள் பரவியது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பொம்மி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 30 கிராம மக்கள் வந்துபோகும் மருத்துவமனையில் இரவில் மருத்துவர்கள் ஏன் இருப்பதில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அடுத்த செய்தி