ஆப்நகரம்

கருணாநிதிக்காக இப்படியொரு பிரம்மாண்டம்; சென்னையில் இன்று திறப்பு விழா!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட உள்ளது.

Samayam Tamil 7 Aug 2019, 10:18 am
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி, கருணாநிதி உடல்நலக்குறைவால் காலமானார். தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த தலைவர் என்ற பெருமையை பெற்றவர். அறிஞர் அண்ணாவிற்கு பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைமை தாங்கி வழிநடத்திச் சென்றவர்.
Samayam Tamil Karunanidhi2


இவர் மறைந்த ஓராண்டு ஆன நிலையில், சென்னையில் இன்று காலை திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. வாலாஜா சாலையில் புறப்பட்டு, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி சென்றது.

Also Read: சென்னையை ஆச்சரியப்பட வைத்த திமுக; கலைஞர் நினைவு நாளில் இப்படியொரு பேரணி!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் மாநிலம் முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார். இறுதியில் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Also Read: திரைக் கலைஞர், திராவிட இயக்கத் தூண், மாபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி - முதலாமாண்டு நினைவுகள்!

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார்.

Also Read: கலைஞர் சிலை திறப்பு விழாவுக்காக சென்னை வந்த மம்தா பானர்ஜி!

கருணாநிதி சிலையை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைகிறார். இதில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

அடுத்த செய்தி