ஆப்நகரம்

ஈரோட்டில் சுவாரசியம்: காணாமல் போன சிலைகளை கோவிலுக்குள் கண்டுபிடித்த அதிகாரிகள்

ஈரோட்டில் காணாமல் போன சிலைகள் கோவிலுக்குள்ளேயே இருந்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Samayam Tamil 7 Sep 2018, 5:52 pm
ஈரோட்டில் காணாமல் போன சிலைகள் கோவிலுக்குள்ளேயே இருந்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
Samayam Tamil erode statue


ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இராசாசுவாமி என்ற பழம்பெரும் கோவில் உள்ளது. இந்த கோவில் தற்போது பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில், இதன் அருகில் மற்றொரு கோவில் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பழைய இராசாசுவாமி கோவிலில் இருந்த பழம்பெரும் சிலைகள் திருடு போனதாக துரைசாமி, பென்தீபங்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பெயரில், சிலை கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள், இராசாசாமி கோவிலில் சோதனையிட்டனர். இதில், கோவிலின் உள்ளையே பத்து சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சிலைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

அடுத்த செய்தி