ஆப்நகரம்

சுதாரித்துக் கொண்ட ஸ்டெர்லைட்! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!!

ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆலோசனை

Samayam Tamil 17 Dec 2018, 1:07 pm
ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், ஸ்டெர்லைட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil sterlite copper a


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வாலா குழு மூலம் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டதன் பேரில் ஆய்வு நடைப்பெற்றது.

இதனையடுத்து தருண் அகர்வாலா குழுவின் பரிந்துரையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டுமென கூறியுள்ள தீர்ப்பாயம், ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், ஆலையை திறக்க போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். .இந்நிலையில், தற்போது ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆலை திறப்புக்கு எதிராக எந்த ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அதற்கு முன்பு தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்பதே இந்த கேவியட் மனுவாகும்.

அடுத்த செய்தி